நீங்க போகாதீங்க ,நாங்களே வாரோம் ! ஆன்லைனில் மது விற்கலாம் – உயர்நீதிமன்றம் அனுமதி
மே 17-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த 7-ஆம் தேதி திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.அதன்படி தமிழகத்தில் திறக்கப்பட்டது.ஆனால் இதில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ஏற்கனவே தமிழகத்தில் டாஸ்மாக்கை திறக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டதால் தமிழகத்தில் முதல் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் வருகின்ற 17-ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் மதுபானங்களை விற்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.