தூத்துக்குடி கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் – துறைமுக ஆணைய தலைவர் பேட்டி!
ரூ.700 கோடி மதிப்பில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என தகவல்.
தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக ரூ.700 கோடி மதிப்பில் கடலுக்குள் காற்றாலை அமைக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தூத்துக்குடி துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், முடிந்த நிதியாண்டில் 38.04 மில்லியன் சரக்குகள் கையாளப்பட்டு, ₹256.15 கோடி உபரி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்றும் முந்தைய ஆண்டை விட 87% அதிகம் எனவும் துறைமுக ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி துறைமுகத்தின் மூலமாக நடுக்கடலில் 2,000 மெகா வாட் திறன் கொண்ட காற்றாலை அமைக்கும் திட்டம் ரூ.700 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக டென்மார்க் நாட்டுடன் இணைந்து மத்திய அரசு நாடாவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஓராண்டில் இந்த திட்டம் தொடங்கப்படும் எனவும் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறியுள்ளார்.