இடைத்தேர்தல் களம் : தேமுதிக வேட்பாளர் செய்த செயலால் பரபரப்பு.! அறிவுரைகள் கூறிய அதிகாரிகள்.!
கட்சி வேஷ்டி மற்றும் கட்சி துண்டு ஆகியவை அணிந்துகொண்டு தேமுதிக வேட்பாளர் ஆனந்த் வாக்களிக்க வந்ததை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
தமிழகமே எதிர்பார்த்து காத்திருந்த ஈரோடு இடைத்தேர்தல் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மக்கள் நீண்ட வரிசையில் கூட காத்திருந்து நின்று வாக்களித்து செல்கின்றனர்.
வாக்குப்பதிவு : காலையிலேயே மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான் கிருஷ்ணன் உன்னி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் ஆகியோர் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என தனித்தனியே செய்தியாளர்களிடம் கூறினர்.
கட்சி துண்டு : அதன் பிறகு, தேமுதிக கட்சி வேட்பாளர் ஆனந்த் வாக்களிக்க வருகையில், தங்கள் கட்சி துண்டு மற்றும் வேஷ்டி அணிந்து வந்தந்தால் வாக்குசாவடியில் பதற்றம் நிலவியது.
உடை மற்றம் : அதாவது, வாக்கு சாவடியில் கட்சி சின்னம், கட்சி கொடியை வாக்காளர்களுக்கு நினைவூட்டும் வகையில் யாரும் நடந்து கொள்ள கூடாது. ஆனால், தேமுதிக வேட்பாளர் அப்படி நடந்து கொண்டதால் , உடனடியாக தேர்தல் அதிகாரிகள் வந்து அவருக்கு அறிவுரைகள் கூறினர். அதன் பிறகு ஆனந்த் தனது உடைகளை மாற்றிவிட்டு ஓட்டுப்போட வந்து தனது வாக்கினை செலுத்திவிட்டு சென்றார்.