செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.எனினும்,ஆரம்பத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் அச்சம் கொண்டனர்.ஆனால்,தற்போது அதிக அளவிலான மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன்காரணமாக,தற்போது தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.
இதனால்,தடுப்பூசி உற்பத்தியை தமிழகத்திலேயே தயாரிப்பது குறித்து முதல்வர் அலோசனை மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில்,கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி குறித்து பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார்.அதன்படி, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அந்த ஆலோசனை கூட்டத்தில் அரசு அதிகாரிகள், பாரத் பயோடெக் நிறுவன மேலான் இயக்குனர் சுசித்ரா இலா,செயல் இயக்குனர் சாய் பிரசாத் மற்றும் பிற அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்நிலையில்,செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை, பாரத் பயோடெக் நிறுவன இணை மேலாண் இயக்குனர் சுசித்ரா இலா தலைமையில்,அதிகாரிகள் தற்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதன்படி,தடுப்பூசி உற்பத்திக்கான கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…