உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 129 இடங்களில் வெற்றிபெற்றனர்.
சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. அதேநேரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பல்வேறு இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், 129 இடங்களில் வெற்றிபெற்றனர்.
இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தன்னுடைய மக்கள் இயக்கத்தினரை நேரில் அழைத்து பனையூரில் உள்ள விஜய் இல்லத்தில் நடிகர் விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்திற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு, தளபதி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை பணிவோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றி வாகை சூடிய மக்கள் இயக்கத்தை சோர்ந்த 129 மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் தளபதி சந்தித்து வாழ்த்து பெற்றனர். இவர்கள் அனைவரும் தமிழக மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதனை தீர்க்கும் நல்வாழ்வு பணியினை, தளபதி உத்தரவுப்படி செய்வனே செயல்படுத்தி மக்கள் பணிகளை தொடருவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…