6 வேட்பாளர்களும் போட்டியின்று தேர்வு-பேரவைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைத் தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனால் வேட்புமனு தாக்கல் நடைபெற்று பரிசீலனை நடைபெற்றது. அதில் தேசத்துரோக வழக்கின் தண்டனை காரணமாக மாநிலங்களவை தேர்தலில் வைகோவின் வேட்புமனு ஏற்கப்படுமா?இல்லையா ?என்ற கேள்வி வெகுவாக இருந்து வந்தது.இதனால் திமுக சார்பில் 3-வது வேட்பாளராக என் .ஆர். இளங்கோ வேட்புமனு தாக்கல் செய்தார்.பின் வைகோவின் மனு ஏற்கப்பட்டதால் திமுகவின் என்.ஆர்.இளங்கோ தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார். திமுகவின் என்.ஆர்.இளங்கோ வேட்பு மனுவை திரும்ப பெற்றதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுகவின் முகமது ஜான், சந்திரசேகர், பாமகவின் அன்புமணி, திமுகவின் வில்சன், சண்முகம், மதிமுகவின் வைகோ ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக பேரவைச் செயலாளர் சீனிவாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.மேலும் காலியிடமும், வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கையும் சரியாக உள்ளதால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.இதனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025
AFG vs ENG: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறப்போவது யார்? ஆப்கானிஸ்தான் பேட்டிங்…
February 26, 2025
“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ” திமுக, பாஜகவை வச்சி செய்த விஜய்!
February 26, 2025