தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்..! அரசாணை வெளியீடு..!
தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகள்.
தமிழகத்தில் புதிதாக தொடங்கும் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகைகளை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெண்டரில் சிறு குறு நிறுவனங்கள் பங்கேற்கும் போது விதிமுறைகள் தளர்த்தப்பட்டு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனத்துக்கு முன் அனுபவம் தேவையில்லை என்றும், டெண்டர் தொகை கட்ட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.