2025 வரை சலுகைகள் நீட்டிப்பு! மின்வாகன கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர்!
மின்வாகனங்களை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் 2025ஆம் ஆண்டு வரை நீடிக்கப்படுகிறது என தமிழக அரசு அறிவிப்பு.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வாகன கொள்கை 2023-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் வெளியிட்டார். திருத்திய மின்சார வாகன கொள்கை 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மின்வாகன உற்பத்தியில் 50 ஆயிரம் ரூபாய் முதலீடுகளை ஈர்க்கவும், இதன்மூலம் 1.50 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கவும் அரசு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.
மேலும், மின்னேற்ற, பொதுமின்கல மாற்று நிலையங்களுக்கான ஊக்க சலுகைகள் 2025 வரை நீடிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்று, சாலை வரி விலக்கு, பதிவு கட்டணம், அனுமதி கட்டணம் தள்ளுபடியும் 31-12.2025 வரை நீட்டிக்கப்டுகிறது என்றும் 50 ஆயிரம் ரூபாய் முதலீடுகளை ஈர்த்து, 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே மின்வாகன முக்கிய நோக்கம் எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வாகனக் கொள்கை 2023-யை வெளியிட்டார். #CMMKSTALIN l #TNDIPR l #CM_MKStalin_Secretariat | @CMOTamilnadu@mp_saminathan pic.twitter.com/p2kAjJajm9
— TN DIPR (@TNDIPRNEWS) February 14, 2023