Offer அவர்களின் கடமை, Acceptance எங்களின் கடமை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Published by
பாலா கலியமூர்த்தி

தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சுமார் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக – பாஜக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. பாஜகவுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் மற்றும் இடங்கள் ஒதுக்கப்படும்.  Offer அவர்களின் கடமை, Acceptance எங்களின் கடமை, அதாவது கேட்க வேண்டியது பாஜகவின் கடமை, அதை ஏற்பதா இல்லையா என்பது அதிமுகவின் முடிவு என்று தெரிவித்தார்.

அனைத்தையும் ஆராய்ந்து, எங்களின் கட்சி நலன் பாதிக்காத வகையில் தான் முடிவு எடுக்கப்படும் என்றும்  திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும்போது ஒன்று, ஆட்சியில் இல்லாதபோது ஒன்று என மாறி மாறி பேசக்கூடிய இரட்டை நாக்கு என்று விமர்சித்தார்.

இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். அதிமுக – பாஜக இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது. பாஜக வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.

Recent Posts

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

14 minutes ago

“விஜய் இந்துக்களுக்கு பச்சை துரோகம் செய்கிறார்!” எச்.ராஜா பரபரப்பு குற்றசாட்டு!

திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…

23 minutes ago

“கச்சத்தீவு கைவிட்டுப்போக காரணமே திமுகதான்”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…

39 minutes ago

ஐஸ்கிரீம், குக்கீஸ் தயாரிப்பதா ஸ்டார்ட்அப் பிசினெஸ்? மத்திய அமைச்சர் கடும் தாக்கு!

டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…

1 hour ago

இனி யாரும் நெருங்க முடியாது! விஜய்க்கு ”Y” பிரிவு பாதுகாப்பு அமல்..!

சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…

2 hours ago

சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்ல தயாராகும் இரண்டாவது இந்தியர்.! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…

3 hours ago