Offer அவர்களின் கடமை, Acceptance எங்களின் கடமை – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தகவல்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கூட்டணி, இடப்பங்கீடு குறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் சுமார் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக – பாஜக இடையே முதற்கட்ட பேச்சுவார்த்தை நிறைவடைந்தது. பாஜகவுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் மற்றும் இடங்கள் ஒதுக்கப்படும். Offer அவர்களின் கடமை, Acceptance எங்களின் கடமை, அதாவது கேட்க வேண்டியது பாஜகவின் கடமை, அதை ஏற்பதா இல்லையா என்பது அதிமுகவின் முடிவு என்று தெரிவித்தார்.
அனைத்தையும் ஆராய்ந்து, எங்களின் கட்சி நலன் பாதிக்காத வகையில் தான் முடிவு எடுக்கப்படும் என்றும் திமுகவை பொறுத்தவரை ஆட்சியில் இருக்கும்போது ஒன்று, ஆட்சியில் இல்லாதபோது ஒன்று என மாறி மாறி பேசக்கூடிய இரட்டை நாக்கு என்று விமர்சித்தார்.
இதனிடையே, பேச்சுவார்த்தைக்கு பிறகு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இடப்பங்கீடு தொடர்பாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் ஆக்கபூர்வ எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார். அதிமுக – பாஜக இடையேயான பேச்சுவார்த்தை சுமுகமாக செல்கிறது. பாஜக வலிமையாக உள்ள இடங்களை ஒதுக்க அதிமுக தலைமையிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025