அக்.1 தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு..12-ம் வகுப்பு முடிக்கும் வரை மாதம் ரூ.1,500!

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு வரும் அக்டோபர் 1-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிப்பு.

தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறிவுத் தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 12-ம் வகுப்பு முடிக்கும் வரை அதாவது 2 ஆண்டுகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் மாதம் ரூ.1,500 கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் 50% அரசுப்பள்ளி மாணவர்கள், 50% தனியார் பள்ளி மாணவர்கள் என்று தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வில் 10-ம் வகுப்பு தமிழ் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Recent Posts

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு

நேபாளம் : நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று ஜனவரி 7, 2025 அன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக…

21 minutes ago

நான் பதவி விலக உள்ளேன் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

ஒட்டாவோ : கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேதனையுடன் அறிவித்துள்ளார்.…

51 minutes ago

சென்னையில் HMPV வைரஸ் : முகக்கவசம் அணிய வேண்டும்! – தமிழக அரசு அறிவுறுத்தல்!

சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்…

1 hour ago

தமிழ்நாட்டில் அத்துமீறும் ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் இன்று போராட்டம்! ஆர்எஸ்பாரதி அறிவிப்பு!

 இந்த வருடத்திற்கான முதல் தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்ற நிலையில்,  ஆளுநர் கலந்துகொண்டு உரையாற்றுவார் என கூறப்பட்டது. ஆனால்,…

2 hours ago

யாரு கேட்டது ரூ.5 கோடி? சந்திரமுகி பட காட்சி விவகாரம்., நயன்தாரா தரப்பு விளக்கம்!

சென்னை : தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக உள்ள நயன்தரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த 2022ஆம்…

10 hours ago

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொலை! 5 இந்திய வம்சாவளியினர் அதிரடி கைது!

நியூ யார்க் : குல்தீப் குமார் எனும் 35 வயது மதிக்கத்தக்க நபர் அமெரிக்காவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் கடந்த…

11 hours ago