நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் – நீதிபதி அமர்வு வேதனை
நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் என சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு வேதனை.
தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆக்கிரமிப்பில் சகிப்புத்தண்மை கூடாது. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பால் மனித இனமே அழிந்து போகும் என தலைமை நீதிபதி அமர்வு வேதனையுடன் கூறியுள்ளது.
ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலையை மீட்டு அறிக்கைத்தாக்கல் செய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி இத்தலார் கிராமத்தில் நீர்நிலையை 4 பேர் ஆக்கிரமித்துள்ளதாக ரமேஷ்குமார் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.