#BREAKING: நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு- உயர்நீதிமன்றம் எச்சரிக்கை..!
மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.
சென்னை, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளில் நீர்நிலைகளை தனியார் மற்றும் அரசு அலுவலங்கள் ஆக்கிரமித்து உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தனி தனியாக வழக்கு தொடரப்பட்டது. இந்த அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து இன்று விசாரிப்பதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது,மாநிலம் முழுதும் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல்செய்ய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது. அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் தலைமை செயலாளரை ஆஜராக சொல்லி உத்தரவிட நேரிடும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அக்கிரமிப்புகளை அகற்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், இனி ஆக்கிரமைப்புகள் அனுமதிக்கப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நீர்நிலைகளை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரும் வழக்குகளை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.