நாடாளுமன்ற தேர்தலில் ஒ.பி.எஸ் மகன் விருப்ப மனு வாங்கியதில் தவறில்லை -அமைச்சர் ஜெயக்குமார்
நாடாளுமன்ற தேர்தலில் ஒ.பி.எஸ் மகன் விருப்ப மனு வாங்கியதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் நல்லதுதான் மக்களுக்கு ஏற்றவகையில் கூட்டணி அமையும். அமமுக, திமுகவை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தைக்கு வரலாம்.
திமுக, அமமுக தவிர மற்ற கட்சிகள் எங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம்.எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வரும் என்பது விரைவில் அறிவிக்கப்படும் .ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக கட்சி,ஆட்சி இருக்காது என ஸ்டாலின் சொன்னார். ஆனால் அது நடந்ததா? எனவே அவர் சொல்கிற எதுவும் நடக்காது.நாடாளுமன்ற தேர்தலில் ஒ.பி.எஸ் மகன் விருப்ப மனு வாங்கியதில் தவறில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.