பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்…!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அவரகள் பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் வெள்ளபாதிப்பால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு, நிவாரண பணிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், அவரகள் பிரதமர் மோடி அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ள நிலையிலும், மக்கள் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
நெருக்கடியான இந்த சூழலில் மீட்பு, நிவாரண, மறுவாழ்வு பணிகளை மேற்கொள்ள போதிய நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
— O Panneerselvam (@OfficeOfOPS) November 9, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025