இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஓபிஎஸ்..!

Default Image

இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட்.

இசைஞானி இளையராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்று தனது 80வது அகவையில் அடியெடுத்து வைக்கும் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளரும், தன்னுடைய இசையால் தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றிருப்பவருமான இசைஞானி திரு.இளையராஜா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இளையராஜா அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும் வாழ வேண்டுமெனவும், இசைத் துறையில் மேலும் பல சாதனைகள் புரிந்து, இந்தியத் திருநாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ உட்பட பல உயரிய விருதுகளைப் பெற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்