ஓபிஎஸ் மனைவி மறைவு…! கனிமொழி எம்.பி இரங்கல் தெரிவித்து ட்வீட்…!
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி மறைவுக்கு கனிமொழி எம்.பி. இரங்கல் தெரிவித்து ட்வீட்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலக்ஷ்மி அவர்கள், கடந்த இரண்டு வாரங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் சென்னை பெருங்குடியில் உள்ள ஜெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். இதுகுறித்து கனிமொழி எம்.பி.அவர்கள் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இணையரும், மக்களவை உறுப்பினர் திரு.ரவீந்திரநாத் அவர்களின் தாயாருமான விஜயலட்சுமி அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் திரு.@OfficeOfOPS அவர்களின் இணையரும், மக்களவை உறுப்பினர் திரு.@OPRavindhranath அவர்களின் தாயாருமான விஜயலட்சுமி அவர்கள் மறைவுற்ற செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர்தம் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) September 1, 2021