குடியரசு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!
இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.
இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மக்களாட்சி முறைக்கு வழிவகுத்த குடியரசு நாளன்று இந்திய விடுதலைக்காக பாடுபட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களின் தியாகத்திற்கும், அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற நாட்டுச் சேவைக்கும் எனது வீரவணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
மக்களாட்சி முறைக்கு வழிவகுத்த குடியரசு நாளன்று இந்திய விடுதலைக்காக பாடுபட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து அவர்களின் தியாகத்திற்கும், அவர்கள் ஆற்றிய தன்னலமற்ற நாட்டுச் சேவைக்கும் எனது வீரவணக்கத்தையும், மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறேன். #RepublicDayIndia pic.twitter.com/1mTWeeBDQ7
— O Panneerselvam (@OfficeOfOPS) January 26, 2022