முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையை வழங்கியதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓபிஎஸ்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜனவரி 2020 முதல் ஏப்ரல் 2020 வரையிலான காலகட்டங்களில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பயன்களின் நிலுவைத் தொகையான ரூ.497.32 கோடியை 2,457 ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்கினார்.
இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வம் அவர்கள், தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘2020 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முந்தைய ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு, தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக நடைமுறைப்படுத்த இயலாததை சுட்டிக்காட்டி, தேர்தல் முடிந்த தற்போதைய நிலையில், அவற்றை ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று 31-5-2021 நாளிட்ட எனது அறிக்கையின் வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
எனது வேண்டுகோளினை ஏற்று, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை 2-6-2021 அன்று நிறைவேற்றியிருக்கிற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
எனது வேண்டுகோளினை ஏற்று, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கையினை 2-6-2021 அன்று நிறைவேற்றியிருக்கிற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 3, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியாவுக்கு சவால் விட்ட இங்கிலாந்து வீரர்..”இப்படியெல்லாம் பேசக்கூடாது”..கெவின் பீட்டர்சன் பதிலடி!
February 13, 2025![ben duckett Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ben-duckett-Kevin-Pietersen.webp)
அதிமுகவில் உட்கட்சி பூசல்? எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் இபிஎஸ்! முன்னாள் அமைச்சர் பேச்சு..,
February 13, 2025![Edappadi Palanisamy - RB Udhayakumar - Seengottaiyan](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Edappadi-Palanisamy-RB-Udhayakumar-Seengottaiyan.webp)
முடிவுக்கு வரும் ரஷ்யா -உக்ரைன் போர்? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்..!
February 13, 2025![russia ukraine war Donald Trump](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/russia-ukraine-war-Donald-Trump.webp)