ஓபிஎஸ் மகனுக்கு “டங் ஸ்லிப்” ஆகிவிட்டது – முன்னாள் எம்.பி அன்வர் ராஜா
முத்தலாக் விவகாரம் குறித்த அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் மக்களவையில் “டங் ஸ்லிப்” ஆகி பேசிவிட்டார் என்று அதிமுக முன்னாள் எம்.பி யான அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கடந்த 24ம் தேதி முத்தலாக் தடுப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், அதிமுக எம்.பி யாக இருக்கும் ரவீந்திரநாத் குமார் அதிமுக முத்தலாக் தடுப்பு மசோதாவை முழுதாக வரவேற்பதாக பேசி இருந்தார். அவர்,அதிமுக தலைமையிடம் முத்தலாக் விவகாரம் குறித்து விவாதித்து பேசவில்லை என்று பலரும் கூறி இருந்தனர். இன்று மக்களவையில் முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தாக்கல் செய்தார். அப்போது, அவையில் பேசிய அதிமுக முத்தலாக் தடுப்பு மசோதாவை கடுமையாக எதிர்ப்பதாக அதிமுக எம்.பி யாக இருக்கும் நவநீதிகிருஷ்ணன் பேசி யிருந்தார்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி அன்வர் ராஜா ஓபிஎஸ் மகன் “டங் ஸ்லிப்” ஆகி பேசிவிட்டார் என்று கூறி இருக்கிறார். மேலும், மக்களவையில் அவசர அவசரமாக இந்த மசோதாவானது நிறைவேற்ற பட்டதால் இது குறித்து விளக்கமாக தெரிந்துகொள்ள போதிய நேரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.