அதிமுகவில் இருந்து ஓபிஎஸ்-ஈபிஎஸ் ஆகியோரை நீக்க வேண்டும்…! பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்…!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன் தலைமையில், அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக-வின் அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும், அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் நீக்கப்படவேண்டும், அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்றும், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை அதிமுக-வில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.