‘ஓபிஎஸ் எங்க கட்சிக்காரருங்க..’ – சசிகலா அதிரடி பேட்டி..!

VK Sasikala

சென்னையில் சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், என்னுடைய அனுபவத்தை நீங்கள் போக, போக தானாக தெரிந்து கொள்வீர்கள். அதிமுகவில் உள்ள அனைவருக்குமே முகவரி கொடுத்தது இந்த இயக்கம். எனவே இந்த எல்லாரும் இந்த இயக்கத்தில் இருப்பதாக அனைவரையும் நினைத்து கொள்வேன்.

எனக்கு பயமே கிடையாது. நான் மக்களை மட்டும் தான் பார்ப்பேன். நாங்கள் திமுக மாதிரி கிடையாது. அதிமுகவாக இருந்தாலும் தப்புனா தப்பு என்று தான் சொல்லுவேன். எங்களுக்கென்று ஒரு வழி உள்ளது. எங்கள் இரண்டு தலைவர்கள் சொல்லி கொடுத்த வழி. நிச்சயமாக இந்த இயக்கம் நன்றாக வரும்.

எப்போதுமே இந்த இயக்கத்தில் ஒரு சின்ன பிரச்னை இருக்கும். ஒரு தலைவர் மறைந்த பின் ஒரு பிரச்னை வரும். அந்த பிரச்னை அப்படியே இருந்ததில்லை. திருப்பி சேர்ந்து விடுவோம். இது 2-வது முறையாக இந்த பிரச்னை நடந்துள்ளது. முதல்முறை சரி செய்ததும் நான்தான். இப்போது உள்ள அனுபவத்தை வைத்து என்னால் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என நான் நம்புகிறேன்.

ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர். அவர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். என்னால் எல்லாரையும் சரி பண்ண முடியும். அந்த கெப்பாசிட்டி எனக்கு இருக்கு. எந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest
Madurai - Kushboo