சதுரங்க வாகையாளர் மாக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து..!
செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக தோற்கடித்து வெற்றி பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு ஓபிஎஸ் வாழ்த்து.
செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா. 11-ஆம் வகுப்பு தேர்வு என்பதால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் விளையாடி கார்ல்சனை இந்தியாவின் பிரக்ஞானந்தா தோற்கடித்தார். இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, இரண்டாவது முறையாக இந்தாண்டில் கார்ல்சனை தோற்கடித்துள்ளார்.
பிரக்ஞானந்தா ஏற்கனவே பிப்ரவரியில் நடந்த மாஸ்டர் செஸ் தொடரில் கார்ல்சனை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘இணையதளம் மூலம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் உலக சதுரங்க வாகையாளர் மாக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி இந்தியத் திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் கொடுத்துள்ள இந்தியாவின் goldmaster பிரக்ஞானந்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!’ என பதிவிட்டுள்ளார்.
இணையதளம் மூலம் நடைபெற்ற சதுரங்கப் போட்டியில் உலக சதுரங்க வாகையாளர் மாக்னஸ் கார்ல்சனை மீண்டும் வீழ்த்தி இந்தியத் திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடித் கொடுத்துள்ள இந்தியாவின் #GrandMaster @rpragchess அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்! pic.twitter.com/Vhw4NTCfxr
— O Panneerselvam (@OfficeOfOPS) May 21, 2022