ஓபிசி இடஒதுக்கீடு – நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

Default Image

ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில்  நீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்த பிரதமருக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல  இடங்களை இழந்துள்ளனர் என குற்றச்சாட்டு  எழுந்தது.எனவே இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் சரியான முறையை பின்பற்றவில்லை என கூறி தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இடஒதுக்கீட்டில்  ஓபிசி பிரிவினருக்கு 50 % இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி திமுக, அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக, காங்கிரஸ், விசிக மற்றும் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாது. மாநில அரசின் கொள்கை என்ற அடிப்படையில் தமிழகம் தொடர்பான இடஒதுக்கீட்டிற்கு சென்னை உயர்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் கூறியது.

இதன் பின்  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது.இதுகுறித்து மனுதாரர் மற்றும் எதிர்மனுதார் எழுத்துப்பூர்வ பதில் அளிக்கலாம் என நீதிபதிகள் கூறிய நிலையில், 50% இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய மருத்துவ கவுன்சில் எழுத்துப்பூர்வ பதில் அளித்தது.

இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே பொருந்தும், உச்ச நீதிமன்ற ஒப்புதல் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்தது. இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்தது.அப்பொழுது இந்திய மருத்துவ கவுன்சிளின் வாதத்தை ஏற்க முடியாது. மேலும் மருத்துவ படிப்புகளில் இடஒதுக்கீட்டில்ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தர சட்டம் இயற்றலாம்.மேலும் மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் ஒபிசி இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை.மேலும் இது தொடர்பாக 3 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும்.இட ஒதுக்கீடு வழங்க சட்டரீதியாக தடை இல்லை என்று தீர்ப்பளித்தது சென்னை உயர்நீதிமன்றம்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அதில்  ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில்,  சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
Priyanka Gandhi - Wayanad
Eknath Shinde - Aaditya Thackeray
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert