OBC மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கிறது.
தமிழகத்திலிருந்து ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்களில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசின் தொகுப்பில் இருந்து வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் அவ்வுத்தரவில் ஒரு குழுவை அமைக்கவும், அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளின் படி இட ஒதுக்கீட்டை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த கடந்த ஜூலை 27ந்தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதில் இழுபறி ஏற்படவே தமிழக அரசு மற்றும் தமிழக அரசியல் கட்சிகள் சார்பாக இந்த ஆண்டே இட ஒதுக்கீட்டை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு மீதான விசாரணை கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 50 % இடஒதுக்கீடு வழங்க முடியாது எண்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.
மேலும் நீட் தேர்வுகள் நடைபெற்று தேர்வு முடிவுகள் தற்போது வெளியாக உள்ள நிலையில் உடனடியாக இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை எடுக்க முடியாது.
அவ்வாறு இட ஒதுக்கீடு வழங்கினால் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு தரப்பில் முன் வைக்கப்பட்டது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…