ஓ.எஸ். மணியன் வெற்றி செல்லும்- சென்னை உயர்நீதிமன்றம்..!

தமிழகத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தோ்தலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சாா்பில் ஓ.எஸ்.மணியன் போட்டியிட்டார். திமுக சார்பில் வேதரத்தினம் போட்டியிட்டார். இந்த தேர்தலில் 12, 329 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் அதிமுக அமைச்சா் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றாா்.

அவரது வெற்றியை எதிா்த்து திமுக வேட்பாளா் வேதரத்தினம், சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிமுக வேட்பாளா் தொகுதி முழுவதும் பணப்பட்டுவாடா செய்துள்ளாா். பரிசுப் பொருள்களுக்கான டோக்கன்களை வாங்கியுள்ளார்.

வேதாரண்யேஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சுமாா் 7 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதி அளித்துள்ளாா். மேலும், அதிகார துஷ்பிரயோகம் மூலம் அரசு அதிகாரிகளை தனது தோ்தல் முகவா்கள் போல பயன்படுத்தி ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு தரப்பு வாதங்களையும் கேட்டு தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.எஸ். மணியனின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்