திமுகவுக்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுகிறார்.! இபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் குற்றசாட்டு.!
ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். என உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதற்கும், அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மதியம் முதல் உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தரப்பினர் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், ‘ஓ.பன்னீர்செல்வம் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார். அதனை நாங்கள் செயற்குழு கூட்டத்தில் ஆலோசித்து பின்னர் தான் முடிவு எடுத்தோம் என கூறினர்.
அதற்கு பதிலளித்த உச்சநீதிமன்ற நீதிபதி, யார் யாருக்கு ஆதரவு தருகிறார்கள் என்பதை நாங்கள் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என குறிப்பிட்டார்கள். இந்த வழக்கு மீதான விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது.