அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு பெற்றதை எம்.ஜி.ஆர் நினைவில்லத்தில் கொண்டாடிய ஓபிஎஸ், விழாவில் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார்.
அதிமுக கட்சி தொடங்கி, நேற்றோடு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இன்று 51வது ஆண்டில் அதிமுக அடியெடுத்து வைக்கிறது. இதனை ஒட்டி, அதிமுக கட்சியினர் பொன்விழா ஆண்டு நிறைவு என கொண்டாடி வருகின்றனர்.
அதிமுக இடைக்கால பொது செயலாளர் இபிஎஸ் தலைமையிலான அணியினர், அதிமுக தலைமை செயலகத்தில் எம்.ஜி.ஆர் , ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
அதே போல, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் உள்ள அணியினர், சென்னை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவு இல்லத்தில் அதிமுக பொன்விழா ஆண்டு நிறைவு கல்வெட்டினை திறந்து வைத்தார். அதன் பிறகு அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது, நிகழ்ச்சியில் ஒருபகுதியாக ஓபிஎஸ் வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார். வெள்ளை புறாக்களை பறக்கவிட்டது, அதிமுகவில் சமாதானத்தை ஏற்படுத்த ஓபிஎஸ் செய்துள்ளாரா என்ற கேள்வி அதிமுகவினர் வசம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…