விஜயகாந்த் இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம் ட்வீட்

விஜயகாந்த் உடல்நலன் குறித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்வீட் செய்துள்ளார்.
தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பதால் தற்போது சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆறு மாதத்திற்கு ஒரு முறை விஜயகாந்திற்கு வழக்கமாக மருத்துவ பரிசோதனை செய்வதற்கு மருத்துவமனை சென்றபோது லேசான கொரோனா அறிகுறி இருந்தது. ஆனால் அதை, உடனடியாக அதை சரிசெய்யப்பட்டு, தற்போது பூர்ண குணமுடன் உள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் தேமுதிக தலைவர் அன்புச் சகோதரர் திரு.விஜயகாந்த் @iVijayakant அவர்கள் விரைவில் பூரணமாக குணமடைந்து இயல்புநிலை திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) September 24, 2020