ப்ளூ காய்ச்சல் தாக்கம்.! பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும்.! ஓபிஎஸ் வலியுறுத்தல்.!

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் குழந்தைகளிடையே பரவி வரும் ‘ப்ளு’ காய்ச்சல்  பரவுவதை தடுக்க புதுசேரியை போல தமிழக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கவேண்டும் என ஓ.பன்னேர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

கொரோனாவை போல, தற்போது ப்ளூ காய்ச்சல் தமிழகத்தில் பரவ தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். புதுசேரியை போல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தாக்கம் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், “ப்ளூ” வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகவும், இந்தக் காய்ச்சல் காரணமாக நாளுக்கு நாள் மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், குறிப்பாக குழந்தைகளிடையே இந்தக் காய்ச்சல் அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக மருத்துவமனைகள் நிரம்பி வருவதாகவும், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.

பொதுவாக, “ப்ளூ” காய்ச்சல் என்பது சளி இருமலுடன் கூடியதாக இருக்கும் என்றும்; இதில் ஒருவருக்கு வந்தால், அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் வரும் என்றும்; பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரும்போது அந்தப் பள்ளியில் பயிலும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பரவும் வாய்ப்பு உருவாகும் என்று மருத்துர்கள் கூறுகிறார்கால்.

இதன் காரணமாக இருதய பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பு அவசியம் என்றும்; கொரோனா தொற்று ஏற்பட்டபோது எந்த அளவுக்கு கவனமாக இருந்தமோ அந்த அளவுக்கு கவனமாக இருப்பது அவசியம் என்றும்; 60-வயதிற்கு மேற்பட்டோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இதிலும் மூச்சுத் திணறல் வரும் வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், “ப்ளூ காய்ச்சல் பரவுவது தடுக்கப்பட வேண்டுமென்றால் அந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரோ அல்லது பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், தொடர் காய்ச்சல் இருப்போர் தாங்களாகவே முன்வந்து ரத்த பரிசோதனை செய்து அதற்குத் தேவையான மாத்திரைகளை உட்கொள்ள வேண்டுமென்றும், மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில், காய்ச்சல் இருந்தால் பள்ளிகளுக்கு வரவேண்டாம் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி பள்ளிகளுக்கு மாணவர்களை வரச் சொல்வதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். “ப்ளூ” காய்ச்சல் மூலம் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்ற இந்தச் சூழ்நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களினையே ஏற்படுத்தவும்; இதனைத் தடுப்பதற்குத் தேவையான மருந்துகளை பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக வழங்கவும்; இந்தக் காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கவும்.

அதிலும், குறிப்பாக தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வினை தள்ளி வைக்கவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு, “ப்ளூ” காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ‘ என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு : இந்திய கிரிக்கெட் வீரர்களின் ‘கருப்பு பேட்ஜ்’ அஞ்சலி!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…

25 minutes ago

LIVE: மன்மோகன் சிங் மறைவு முதல்… அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் வரை!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…

25 minutes ago

மன்மோகன் சிங் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்! மோடி முதல் ஸ்டாலின் வரை…

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…

1 hour ago

மன்மோகன் சிங் மறைவு – 7 நாட்கள் துக்கம் அனுசரிப்பு! இறுதிச்சடங்கு எப்போது?

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…

2 hours ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு… மருத்துவமனை அறிக்கை.!

டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…

3 hours ago

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (27/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…

13 hours ago