விஜயகாந்த் உடலை பார்த்து கலங்கி நின்ற ஓபிஎஸ்.! அன்பு நண்பர்.. நல்ல தலைவர்…

Vijayakanth - O Panneerselvam

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டது. அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

அதன் பிறகு அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டது. அங்கு, சினிமா , அரசியல் பிரபலங்கள் , தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்திற்கு நேரில் அஞ்சலி செலுத்த திரளானோர் வந்து கொண்டு இருந்ததால், தேமுதிக கட்சி அலுவலகத்தில் இருந்து இன்று அதிகாலை சென்னை தீவுத்திடலுக்கு விஜயகாந்த் உடல் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

விஜயகாந்தை பொதுக்குழுவில் பார்க்கும் போது நம்பிக்கை குறைந்தது -ரஜினிகாந்த்..!

சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிவிட்டு, விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது சில நிமிடம் கண்கலங்கி விஜயகாந்த் உடல் அருகே ஓபிஎஸ் நின்றுவிட்டார். பின்னர் அவரது ஆதரவாளர்கள் அவரை தேற்றி அழைத்து சென்றனர்.

பின்னர் , விஜயகாந்த் குறித்து ஓபிஎஸ் வருத்தத்துடன் பேசுகையில், விஜயகாந்த் மரணம் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவரின் மனதிலும் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்பு நண்பர் சிறந்த நடிகராக மட்டுமல்லாமல், நல்ல தலைவராகவும் இருந்தவர். ஏழை எளிய மக்களுக்கு உதவுபவர். நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது, அந்த சங்கத்தின் கடன்களை தீர்த்தவர். தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி தலைவராக சிறந்த முறையில் செயல்பட்டவர். 2011-ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் தமிழ்நாட்டில் முதலமைச்சராக வருவதற்கு உறுதுணையாக இருந்தவர். அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என வருத்தத்துடன் தனது இரங்கலை தெரிவித்துவிட்டு சென்றார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்