எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான் என்று தீபா தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், போயஸ் தோட்ட வீட்டிற்கு இழப்பீட்டுத்தொகை நிர்ணய உத்தரவை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்த்திருந்தார். அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது எங்கு இருந்தீர்கள் ..? என ஜெ.தீபாவுக்கு கேள்வி நீதிபதி எழுப்பினார். போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டை அரசு கையகப்படுத்தும் உத்தரவிற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தும், இந்த வழக்கு விசாரணையை 2 பேர் கொண்ட கிருபாகரன் அமர்வுக்கு மாற்ற நீதிபதி பரிந்துரை செய்தார்.
இந்நிலையில் இது குறித்து தீபா கூறுகையில், சொத்துக்கான போராட்டம் அல்ல. உரிமைக்கான போராட்டம்.எல்லா பிரச்னைக்கும் காரணம் ஓ.பன்னீர்செல்வம்தான்.நான் இப்போது ஜெயலலிதாவின் ஆன்மாவைதான் நம்பியுள்ளேன்.நீதிமன்றத்தின் கேள்வி வருத்தத்தைஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…
சென்னை :கரும்புச்சாறை வைத்து பொங்கல் ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்: பச்சரிசி…
சென்னை: துபாயில் நடைபெற்ற வரும் 24 மணி நேர கார் பந்தயத்தில் 922 போர்ஷே கார் பிரிவில், நடிகர் அஜித்குமாரின்…