ADMK : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிரிந்தனர். இதில் இபிஎஸ் பக்கம் அதிக ஆதரவு இருந்த காரணத்தால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்தும் தற்போது வரையில் இபிஎஸ்க்கு ஆதரவாகவே உத்தரவு வழங்கியுள்ளனர். மேலும், நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி பயன்படுத்தவும் உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டது.
இப்படியான சூழலில் தான் , வரும் மக்களவை தேர்தலில் எடப்படி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓர் கோரிக்கை வைத்துள்ளர். அதில் , தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை முழுவதுமாக முடக்க வேண்டும் என்றும், ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் தனக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…