ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, போட்டித் தேர்வினை ரத்து செய்யவும், தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களை பணியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டு என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்னும் வேலை வழங்கப்படவில்லை எனவும், ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்றிருந்தாலும், போட்டித்தேர்வு வைக்கப்படும் என்ற முடிவை கைவிட வேண்டும் எனவும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றிபெற்ற நூற்றுக்கணக்கானோர் சென்னையில் போராட்டம் நடத்தினர்.
தற்போது இது குறித்து, ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார் . அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர வேண்டும் என்பதற்காக மட்டுமே திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த தேர்தல் அறிக்கை பொய்யின் மறுஉருவம்.
இதற்கு ஒரு உதாரணம்தான் ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு ஆசிரியர் பணி இன்னும் வழங்காதது. 2020 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தியபோது, அதற்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் 80,000 ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.
இதனைத் தொடர்ந்துதான் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில், 2013 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்து எந்த அறிவிப்பையும் தி.மு.க. அரசு வெளியிடவில்லை.
ஆனால், தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, போட்டித் தேர்வினை ரத்து செய்யவும், தேர்ச்சி மூப்பு அடிப்படையில் அவர்களை பணியமர்த்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். ‘ என அந்த அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
பெர்த் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொள்ளும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நேற்று பெர்த் மைதானத்தில் …
சென்னை : ஒரே நேரத்தில் 2 படங்களில் நடித்து வருவதுடன், கார் ரேஸிலும் பங்கேற்று வருகிறார் அஜித் குமார். மகிழ்…
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…