தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.!
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ராஜா கிருஷ்ணமூர்த்தி 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டதற்கு ஓ. பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் பிறந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி கடந்த 2016-ல் முதல் முறையாக பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், தற்போது நடந்த தேர்தலில் லிபர்டேரியன் கட்சியின் பிரஸ்டன் நெல்சனை தோற்கடித்து இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜனநாயக காங்கிரஸ்காரரான ராஜா கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இவருக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது டிவிட்டர் பக்கத்தில், திரு.ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சியின் காங்கிரஸ்காரர், தொடர்ந்து மூன்றாவது முறையாக அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெற்றோர் எங்கள் சொந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இது உண்மையில் தமிழ்நாட்டிற்கு ஒரு பெருமை என்று தெரிவித்துள்ளார்.
My heartfelt wishes to Mr.Raja Krishnamoorthi @CongressmanRaja the Indian-origin Democratic congressman, who has been re-elected to the US House of Representatives for the third consecutive term. It is indeed a pride for TamilNadu as his parents belong to our home state. pic.twitter.com/2WNcrEf3ng
— O Panneerselvam (@OfficeOfOPS) November 4, 2020