கர்நாடக அரசிற்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்..!

Default Image

கர்நாடக மாநிலத்தில் 2022 -23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேகதாது திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது திட்டத்திற்கு இடையூறு செய்ய தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான கே. சித்தராமையா ஒரு வாரத்திற்கு முன்பு கூறிய நிலையில், இன்னும் ஒருபடி மேலே சென்று மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது நீதிமன்ற அவமதிப்பாகும்.

2022-2023 ஆம் ஆண்டிற்கான கடக மாநில நிதிநிலை அறிக்கை நேற்று கர்நாடக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதிநிலை அறிக்கையில், பக்கம் 23, பத்தி 75-ல், மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதியை பெற்று மேகதாது அணை மற்றும் பெங்களூரு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டின் உரிமையை பறிக்கும் வகையில் அறிவிப்பினை வெளியிட்டுள்ள கர்நாடக அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் எந்த அணையையும் கர்நாடக அரசு கட்ட முடியாது என்ற நிலையில் கர்நாடக அரசின் தன்னிச்சையான போக்கை தடுத்து நிறுத்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசின் மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்