ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தினோம்.! பாஜக நிர்வாகி சி.டி.ரவி பேட்டி.!
திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினோம். – பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி செய்தியாளர்களிடம் பேச்சு.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகிகள் சேர்ந்து இன்று காலை எடப்பாடி பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார் . அதே போல ஓ.பன்னீர்ச்செல்வம் அவர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த இரு சந்திப்புகளை அடுத்து தற்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக முக்கிய நிர்வாகி சி.டி.ரவி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து தங்கள் சந்திப்பு குறித்து பேசினார்கள். அவர்கள் கூறுகையில், 1972இல் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிக்கும் போதே திமுக ஓர் தீய சக்தி என்று தான் கட்சி ஆரம்பித்தார். அப்போது இருந்து இப்போது வரையில் அது மாறவே இல்லை என கூறினர்.
மேலும், தமிழகத்தில் பால்விலை, மின்சார விலை ஏற்றம், சொத்துவரி ஏற்றம் ஆகியவற்றை செய்து திமுக மக்களுக்கு எதிரான கட்சியாக இருந்து வருகிறது என குறிப்பிட்டனர். அடுத்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இருவரையும் சந்தித்தோம் . எங்கள் கட்சி தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின் பெயரில் அவர்களை சந்தித்து ஆலோசித்தோம். இருவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்தோம். என குறிப்பிட்டனர்.
மேலும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினோம். என கூறினர். அடுத்து, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி 7ஆம் தேதி தான்.எ அதனால் எங்கள் நிலைப்பாட்டை விரைவில் அறிவிப்போம் என பாஜக நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் சி.டி.ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறினர்.