இன்று வாரணாசி செல்கிறார் ஓ.பன்னீர் செல்வம்!
மறைந்த தனது தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக, இன்று வாரணாசி செல்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.
முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (வயது 95) வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை (பிப்.24) காலமானார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. பழனியம்மாளின் இறப்புக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஒ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாளின் இறுதிச் சடங்குகள் நேற்று நடைபெற்றன. இந்த நிலையில், மறைந்த தனது தாயாரின் அஸ்தியை கரைப்பதற்காக, இன்று வாரணாசி செல்கிறார் ஓ.பன்னீர் செல்வம். மதுரையில் இருந்து சென்னை வழியே வாரணாசிக்கு விமானத்தில் செல்கிறார்.