ஓ.பன்னீர்செல்வம் என்னை சந்திக்க இருந்ததை ஒப்புக்கொள்ள வைக்கிறேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் பேட்டியளித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தான் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற விரக்தியில் அலைந்து கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன் விசுவாசமாக அரசியல் செய்து கொண்டிருக்கிறேன் .எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் ஆக முயற்சி என்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு ஆகும்.
அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்து தினகரன் இப்படி செயல்பட்டு வருகிறார் .தினகரன் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு தங்க தமிழ்ச்செல்வனை முதலில் பேட்டி கொடுக்க வைத்து விட்டு பின்னர் பேசுகிறார் .
பொய்யான குற்றச்சாட்டை என் மீது சுமத்தி இருக்கிறார் தினகரன்’ மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார்’ நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன்’ .
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்து மக்களை ஏமாற்றியவர் தினகரன் நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற மனக்கவலையுடன் தினகரன் உள்ளார்.
சந்திப்பு நடந்தது உண்மை தான் டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டதால் 2017 ஜூலை 12 ஆம் தேதி பொதுவான நண்பர் வீட்டில் அவரை சந்தித்தேன்.பலர் வலியுறுத்தியதால் அரசியல் நாகரீகம் கருதி தினகரனை சந்தித்தேன்.மனம் திருந்தி நல்ல வார்த்தை சொல்வார் என்ற நம்பிக்கையில்தான் டிடிவி தினகரனை சந்தித்தேன் ,ஆனால் கட்சியை கைப்பற்றவே அவர் நினைத்தார்.
எனக்கிருக்கும் நல்ல பெயரை கெடுக்க வேண்டுமென தினகரனும் அந்த கொடிய கூடாரமும் வேலை செய்து கொண்டிருக்கிறது.மேலும் எடப்பாடி பழனிசாமி அரசை கலைத்து விட்டு முதல்வர் ஆக முயற்சி என்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதை பார்த்து குழப்பமடைந்து தினகரன் இப்படி செயல்பட்டு வருகிறார்.அணிகள் இணைந்த பின்னர் டிடிவி உடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.
மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன், அந்த திருப்தியே போதும்; ஆட்சியை கவிழ்த்து விட்டு முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை என்று இவ்வாறு தினகரன் சந்திப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம் விளக்கமளித்தார்.
இந்நிலையில் மீண்டும் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மீண்டும் என்னை பார்க்க விரும்புவதாக நண்பர் ஒருவர் மூலம் ஓபிஎஸ் அழைத்ததால் சந்திப்பு குறித்து வெளியே கூற வேண்டிய நிலை வந்தது .முதல்வராக வேண்டும் என்ற எண்ணத்தில்தான் என்னை மீண்டும் சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் முயற்சி செய்கிறார்.தினகரன் ஒரு பொருட்டல்ல என கூறும் அமைச்சர்கள், அனைத்து மேடைகளிலும் என்னை எதிர்த்து பேசுவது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் என்னை சந்தித்ததாக ஒப்புக்கொண்ட ஓபிஎஸ், என்னை சந்திக்க இருந்ததை ஒப்புக்கொள்ள வைக்கிறேன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…