நர்சிங் படிப்பில் இணைந்த திருநங்கை….!!!
வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகா புளியங்கன்னு என்ற ஊரைச் சேர்ந்தவர் தமிழ் செல்வி. திருநங்கையாக இவர் பிளஸ் 2 படித்து முடித்ததும் கடந்த ஆண்டு பாரா மெடிக்கல் படிப்புக்காக விண்ணப்பித்தார். ஆனால், திருநங்கை என்பதால் இவரது விண்ணப்ப மனுவை தள்ளுபடி செய்தனர். ஆனாலும் மனமுடையாத தமிழ் செல்வி, தனியார் செவிலியர் கல்லூரி ஒன்றில் விண்ணப்பித்தார். அங்கே அவருக்கு அனுமதி அளித்ததில் பேரில் சுமார் 30 ஆயிரம் செலவழித்து செவிலியர் படிப்பில் சேர்ந்தார்.