புதிய சீருடையில் சீர்நடை போடும் சுகாதாரத் துறை..!!அசத்தும் அரசு செவிலியர்கள்..!
தமிழக அரசின் அதன் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக் கூடிய செவிலியர்களுக்கு புதிய சீருடைகளை அத்துறையின் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னையில் அறிமுகப்படுத்தினார்.
இந்த சீருடையானது முன்பு இருந்த சீருடையிலிருந்து சற்று மாறுயுள்ளதாக செவிலியர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இந்த சீருடை மாறுதல் குறித்து முன்பே சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துருந்த நிலையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் செவிலியர்களின் வசதிக்காக அவர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பணியாற்றும் செவிலியறுகளுக்கு ஏற்றவாறு சீருடைகளில் மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்த நிலையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் தலைமையின் கீழ் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவானது முதல்நிலை செவிலிய கண்காணிப்பாளர்கள் மற்றும் 2-ஆம் நிலை செவிலிய கண்காணிப்பாளர்கள், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்கள் மேலும் 10 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் என்று ஆண், பெண் செவிலியர்களுக்கு என பிரத்யேக புதுப்புது வண்ணங்களுடன் அவர்களுக்கென தனித்தனியே சீருடைகள் வடிவமைக்கப்பட்டது.
இந்த நடவடிக்கை மூலம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றக் கூடிய நிரந்தர மற்றும் தற்காலிக செவிலியர்கள் சுமார் 26 ஆயிரத்து 464 பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த புதிய சீருடைகளை சென்னையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை அறிமுகப்படுத்தினார்.