9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்.!
9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்.
உருவானது புயல்:
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மோச்சா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று நாளை அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது.
2ம் எண் புயல் எச்சரிக்கை:
இந்நிலையில், வங்கக்கடலில் ‘மோக்கா புயல்’ உருவானதை குறிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
புயல் எப்போது கரையை கடக்கும்:
‘மோச்சா’ என பெயரிடப்பட்டுள்ள புயல் வங்கதேசம், மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது. மே 14ம் தேதி ‘மோச்சா’ புயல் வங்கதேசம் – மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளதால் கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தி வீசக்கூடும்.