NTK Party Person Balasubramanian was hacked to death in Madurai [File Image]
மதுரை: நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு மாவட்ட துணை செயலாளராக பொறுப்பில் இருந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர். இன்று காலை பாலசுப்ரமணியன் வழக்கம் போல நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை, சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் இன்று காலை பாலசுப்பிரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். அப்போது அவரை பின்தொடர்ந்த மர்ம கும்பல் கூரிய ஆயுதங்களால் அவரை கொடூரமாக தாக்கியுள்ளது. இந்த பயங்கர தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த பாலசுப்ரமணியன் அந்த இடத்திலேயே சரிந்து விழுந்துள்ளார்.
அப்போது அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்ரமணியன் உயிரிழந்தார். இதனை அடுத்து, பாலசுப்ரமணியன் உடல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அதிகாலையில் பிரதான சாலையில் அரசியல் பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…
பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…