எனக்கு காவி வேண்டாம்! நான் சங்கி இல்லை., சீமான் ஆவேசம்!
எனக்கு என்ன உடை வேண்டுமானால் போடுங்கள், காவி உடை எனக்கு பொருந்தாது என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேற்று மாவீரர் நாள் கூட்டத்தில் பேசினார்.
சென்னை : நேற்று (நவம்பர் 28) விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை (நவம்பர் 26) முன்னிட்டு, மாவீரர் நாள் கூட்டம் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் செங்கல்பட்டு, மதுராந்தகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பங்கேற்றிருந்தார்.
அப்போது அவர் பல்வேறு அரசியல் கருத்துக்களை பேசினார். நான் சங்கி இல்லை, நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு பற்றிய செய்திகள் என பல்வேறு உலாவல்களுக்கு விளக்கம் அளித்திருந்தார். அவர் பேசுகையில், எனக்கும் என் தலைவனுக்கும் (பிரபாகரன்) இடையே என்ன நடந்தது என எங்களுக்கு மட்டுமே தெரியும். அதனை பார்த்த சில தலைவர்களால் சொல்ல முடியாது. சிலர் உயிருடன் இல்லை.
அதே போல, நானும் அண்ணன் ரஜினிகாந்தும் இரண்டே கால் மணிநேரம் என்ன பேசினோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். அவங்க என்ன பேசியிருப்பார்கள், என்ன நடந்திருக்கும், ரஜினியை சந்தித்ததால் ‘சங்கி’ ஆகிவிட்டாரா? என பலர் பேசுகின்றனர். நான் ஒரே ஒரு முறை தான் சந்தித்தேன் அப்போதே சங்கி ஆகிவிட்டேன் என்றால், அவரை வைத்து வருடத்திற்கு 2 படம் எடுத்து காசு சம்பாதிக்கிறீர்கள். திருமணம் , காதுகுத்து, புத்தக வெளியீடு என எங்கு போனாலும் அவரையும் அழைத்துக்கொள்கிறீர்களே நீங்கள் யார்?” என திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார் சீமான்.
மேலும், ” அவர் திரையுலகின் சூப்பர் ஸ்டார். நாம் அரசியல் சூப்பர் ஸ்டார் . 2 சூப்பர் ஸ்டாரும் சந்தித்து பேசினோம். எனக்கு எந்த உடை வேண்டுமானாலும் கொடுங்கள். ஆனால், காவி எனக்கு சரியான உடை அல்ல. அதனை நான்வெறுக்கிறேன். எனக்கு பின்னாடி அவன் இருக்கிறவன் என்றால், அவன் தான் என் சின்னத்தை எடுத்துட்டு, எனக்கு ரெய்டு விடறானா?” என பாஜகவையும் மறைமுகமாக விமர்சனம் செய்தார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.