குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நிறுத்த கோரியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை பாரிமுனை குறளகம் அருகே நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் சென்னை உயர் நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையம் அருகில், குறளகம் முதலாக பாரிமுனை சிக்னல் வரையில் சுமார் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, அவர்கள் கையில் குடியுரிமை சட்டம் குறித்தபதாகைகளையும், இந்திய தேசியக்கொடியையும் ஏந்தி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட சீர்மிகு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…
காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…
ஜெய்ப்பூர் : நேற்றிலிருந்து இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பெயர் என்றால் ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்சி…
சென்னை : கடந்த ஏப்ரல் 26 (திங்கள்) அன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன்…
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் ஆருத்ரா எனும் 4 வயது குழந்தை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…