லோக் சபா தேர்தல்: புதுச்சேரிக்கான என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு
- புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக கே.நாராயணசாமி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
புச்சேரியில் அதிமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை அறிவிக்காவிட்டாலும், சட்டமன்ற சபாநாயகர் வைத்தியலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதனால், காங்கிரஸ் கட்சி வைத்தியலிங்கத்தை வேட்பாளராக களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக கே. நாராயணசாமி (29) அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். மருத்துவரான கே.நாராயணசாமி, கடந்த 3 ஆண்டுகளாக கட்சியின் இளைஞர் அணியில் இருந்து வருகிறார்.