இனி ரூ.20 கொடுத்து சென்னையை சுற்றலாம் ..!
சென்னையில் உள்ள பொதுமக்கள் எந்தவிதமான சிரமமும் இல்லாமல் சீக்கிரமாக செல்லவேண்டிய இடத்திற்கு செல்ல மெட்ரோ ரயில் உதவியாக உள்ளது. டிராபிக் பிரச்சனை இல்லாமல் குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயிலை தற்போது பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்
இந்த நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எங்குவேண்டுமெனாலும் செல்ல எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது. முதற் கட்டமாக கிண்டி மற்றும் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகிறது.
As part of providing several last mile connectivity facilities for Chennai Public and Passengers, Electric bikes have been introduced at Guindy and Alandur Metro Station as a pilot project. The Electric bikes have been provided by VOGO Electric Bikes. 1/3 pic.twitter.com/N22ogPLiHJ
— Chennai Metro Rail (@cmrlofficial) November 6, 2019
இந்த திட்டத்தை வோகோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 20 ரூபாய் கொடுத்து புக்கிங் செய்து எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதற்காக ஓட்டுநர் உரிமம் மற்றும் புகைப்படத்தை ஆன்லைனில் பதிவு செய்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பெற்றுக் கொள்ளலாம்.
ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.4 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும். இந்த கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம் 10 மணிநேரத்திற்கு மேல் வாகனத்தை பயன்படுத்தினால் 1 மணி நேரத்திற்கு கூடுதலாக ரூ.36 வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.