இனி 58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்.. தமிழக அரசு அரசாணை வெளியீடு!
ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது உச்ச வரம்பை தளர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களுக்கான நேரடி நியமனங்களுக்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு பொதுப்பிரிவினருக்கு 53 வயது என்றும் இதர பிரிவினருக்கு 58 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது
அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களில் சேர்வதற்கான வயது உச்சவரம்பு தளர்த்தப்படும் என்று கடந்த மாதம் சிறுமான்மையினர் ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். தற்போது, முதலமைச்சர் அறிவித்தபடி, ஆசிரியர் பணியிடங்களுக்கான வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
Read More – காங்கிரஸில் இருந்து விஜயதரணி நீக்கம்!
இதுதொடர்பான அரசாணையில், பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது.
முதலமைச்சர் கடந்த மாதம் 9ம் தேதி வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஆய்வு மேற்கொண்டு பள்ளிக் கல்வித் துறையின்கீழ் உள்ள அரசுப் பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனத்திற்கான வயது உச்ச வரம்பு மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குபடுத்துதல் சட்டம் மற்றும் தொடர்புடைய விதிகளின்கீழ் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு மேற்கொள்ளப்படும் நேரடி நியமனங்களுக்கான உச்ச வயது வரம்பினை பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயித்து அரசாணை வெளியிடப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் அனைத்து வகையான ஆசிரியர்கள் நேரடி நியமனம் தொடர்பான சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமன பணிநாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணை வெளியிடப்பட்டது தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட அரசு நிதியுதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலைமற்றும்
1/2 pic.twitter.com/cIOiaxTnzN— TN DIPR (@TNDIPRNEWS) February 24, 2024