இனி எங்கு சென்றாலும் கவலையில்லை… உச்சநீதிமன்றமே இறுதியானது.! இபிஎஸ் உற்சாக பேட்டி.!

Default Image

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,  இனி அவர்கள் (ஓபிஎஸ் ) எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை. உச்சநீதிமன்றம் தான் இறுதியானது. என குறிப்பிட்டார். 

இன்று கடந்த வருடம் ஜூலை மாதம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை இபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு : இந்த தீர்ப்பு குறித்து இன்று மதுரையில் 51 ஜோடிகளுக்கான திருமண விழாவை நிறைவு செய்து விட்டு, செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

தீர்மானங்கள் செல்லும் : அவர் கூறுகையில், இனி அவர்கள் (ஓபிஎஸ் ) எங்கு சென்றாலும் எங்களுக்கு கவலையில்லை. உச்சநீதிமன்றம் தான் இறுதியானது. அவர்களே அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கி விட்டார்கள். அப்படியானால் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும். என குறிப்பிட்டார்.

ops,epsteam

ஒரு சிலரை தவிர… : மேலும், அதிமுக சட்டப்போராட்டத்தில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இனி உற்சாகத்தோடு எங்கள் பணிகளை தொடர்வோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும்,  ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு சிலரை தவிர அதிமுகவுக்கு வேலை பார்த்த அனைவரும் திரும்பி வரலாம். என இபிஎஸ் கூறினார்.

ஆளும் கட்சி நாங்கள் தான் : அடுத்ததாக,  ஈரோட்டு தேர்தலில் வெற்றி பெற இந்த தீர்ப்பு உதவி செய்யும். எனவும், அதிமுக வலுவாக தான் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட குறைவான வாக்கு சதவீதத்தில் தான் நாங்கள் தோற்றோம். இல்லை என்றால் நாங்கள் தான் ஆளும் கட்சி. என உற்சாகமாக பேட்டியளித்தார் எடப்பாடி பழனிசாமி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்