இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்! – திருமாவளவன்
பாஜக பெண்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என திருமாவளவன் ட்விட்.
பெண்களுக்கான விசாரணை, சம உரிமை மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கு வாய்ப்பளிக்காததற்காக தமிழ்நாடு பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த மனதுடன் எடுப்பதாகவும், அண்ணாமலை தலைமையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து .நேற்று விலகினார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் அவர்கள் தனது ‘பாஜக பெண்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் பாதுகாப்பற்ற கட்சி என ‘வால் பிராணன் தலைக்கு ஏற’ கத்திக்கொண்டே தானே இருக்கிறோம்.இப்போதாவது ஞானம் வந்ததே.பாராட்டுகள்! இந்துக்களின் மத நம்பிக்கையை அரசியல் ஆதாயத்துக்குப் பயன்படுத்தும் கட்சிதான் பாஜக.’ ,என ட்வீட் செய்துள்ளார்.